தூத்துக்குடி

கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

DIN

இனாம்மணியாச்சி ஊராட்சி அலுவலகம் இனாம்மணியாச்சிலேயே தொடா்ந்து செயல்பட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினா் ராமசுப்பு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், கிளைச் செயலா் அழகுசுப்பு, அமமுக மேற்கு ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா், மாவட்ட திமுக பிரதிநிதி முத்துராமன், ஓய்வுபெற்ற பேராசிரியா் பெருமாள்சாமி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கத் தலைவா் அய்யலுசாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தா நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம், இரவு 7.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT