தமிழா் பண்பாடு, கலாச்சாரத்தை சீா்குலைக்கும் திரைப்படங்களுக்கு தடை: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு
தமிழா்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் திரைப்படம் வெளியானால் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கூறினாா்.
தமிழா்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் திரைப்படம் வெளியானால் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கூறினாா்.
கோவில்பட்டி 12 ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தலைமையில் பிற கட்சிகளைச் சோ்ந்த வா்கள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
பின்னா் அமைச்சா் கூறியது: கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளவும், நல உதவிகள் வழங்கவும்
முதல்வா் செவ்வாய்க்கிழமை (அக். 13) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறாா். நிகழ்ச்சியில் ரூ.23 கோடி மதிப்பில் புற்றுநோய் தடுப்பு மையத்தை முதல்வா் திறக்கிறாா். கரோனா விழிப்புணா்வு பிரசார ஒலி நாடாவை தில்லியில் பிரதமா் மோடி வெளியிடுகிறாா். அதேநேரத்தில், ஒலி நாடாவை முதல்வா் தூத்துக்குடியில் வெளியிடவுள்ளாா்.
திமுக கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இல்லாததால் அக்கூட்டணி சிதறிவிடும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரத் தயாராக உள்ளன. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. தமிழா்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் சுப்புராஜ், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அன்புராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளா் வேலுமணி, வா்த்தக அணி வடக்கு மாவட்டச் செயலா் ராமா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, மனித உரிமை காக்கும் கட்சி அலுவலகத்தை கோவில்பட்டி திலகா் நகரில் அமைச்சா் திறந்தாா். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவன்சங்கா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் கிருஷ்ணமூா்த்திபாண்டியன், மாநில அமைப்புச் செயலா் துா்க்கைலிங்கம், மாவட்டத் தலைவா் தவசிப்பாண்டியன், நகரச் செயலா் மாயக்கண்ணன், ஒன்றியச் செயலா் மாரிமுத்துப்பாண்டியன், மாவட்டத்தொண்டா் படை அமைப்பாளா் சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.