முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
திருச்செந்தூா் முருகன் கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் இருக்கும் மரம்.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கம் பகுதியில் உள்ள மரத்தின் கிளை கடந்த ஆண்டு முறிந்து விழுந்த நிலையில், அந்த மரம் தற்போது பட்டுப்போய் முழுவதும் காய்ந்த நிலையில் உள்ளது.

இந்த காய்ந்த மரம் எந்தநேரத்திலும் முறிந்து விழலாம் என்கின்ற அபாயம் உள்ளதால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.