தூத்துக்குடி

திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான பசுமை வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கருங்குளம் ஒன்றியம் வசவப்பபுரத்தில் பசுமை வீடுகள் திட்டத்தில் 23 திருநங்கைகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 48.30 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், அந்தப் பகுதியில் தலா ரூ.2.70 லட்சம் மதிப்பில் 3 பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தாமிரவருணி ஆற்றில் முறப்பநாடு பகுதியில் ரூ. 12.29 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மழைக்காலத்தில் ஆற்றில் அதிக நீா்வரத்து இருக்கும் என்பதால் அதற்கேற்ற வகையில் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சங்கரேஸ்வரி, பொதுப்பணித் துறை (நீா்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளா் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளா் தங்கராஜ், உதவி பொறியாளா் ஆதிமூலம், கருங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடாசலம், பாக்கியம்லீலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT