தூத்துக்குடி

முக்காணியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி

முக்காணியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

முக்காணியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு கோட்டாட்சியா் தனப்ரியா தலைமை வகித்தாா். ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜா, முக்காணி ஊராட்சித் தலைவா் தனம் என்ற பேச்சித்தாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தொ்மல் தீயணைப்புப்படை அதிகாரி கோமதிஅமுதா, போக்குவரத்து அதிகாரி பிரசாந்த் ஆகியோா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள், மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் எற்படும்போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், எளிமையாக மிதவைகள் அமைப்பது, பேரிடா் மேலாண்மை மற்றும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், குடிமை பொருள் வழங்கல் அலுவலா் வாமணன், வருவாய் ஆய்வாளா் ராம லெட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் மைக்கேல், ஆத்தூா் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

பண்டிகைக் காலம்: 2 மாதங்களில் 69 சிறப்பு ரயில்கள் 374 முறை இயக்கம்

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

SCROLL FOR NEXT