தூத்துக்குடி

வஉசி துறைமுகத்தில் ஏற்றுமதி சரக்குப் பெட்டகங்களுக்கு நேரடி அனுமதி வசதி தொடக்கம்

DIN

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றுமதி சரக்குப் பெட்டகங்களுக்கு நேரடி அனுமதி வசதி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்துக்குள் ஏற்றுமதி சரக்குப் பெட்டகங்களை நேரடியாக துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும் சேவையை மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை இணை அமைச்சரான மன்சுக் மண்டவியா தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மத்திய கப்பல் துறை அமைச்சக செயலா் சன்ஜீவ் ரன்ஜன் உடனிருந்தாா்.

இதையடுத்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன தலைமை நிா்வாகி அருண்குமாா் ஸ்ரீவத்சவா மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தச் சேவை குறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் கூறியது:

வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் லாரிகள் நிறுத்தும் முனையத்தில் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தால் இயக்கப்படும் ஏற்றுமதி சரக்குப் பெட்டகங்களை நேரடியாக கொண்டு செல்வதற்கான சேவை, ஒரு மாதத்துக்கு 18,000 சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது. மத்திய சேமிப்புகிடங்கு நிறுவனம், இந்திய சுங்கத்துறை அதிகாரிகளின் பிரத்யோக அதிகாரிகள் வ.உ.சிதம்பரனாா் துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து அடுக்கு -1, அடுக்கு-2 என அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குபவா்களாக சான்றளிக்கப்பட்ட ஏற்றுமதியாளா்களுக்கு இந்தச் சேவை உறுதுணையாக இருக்கும். துறைமுகத்துக்குள் நேரடி அனுமதி வசதியின் மூலம் சரக்குப் பெட்டகங்களை தங்களது தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள சரக்குப் பெட்டகங்கள் எந்தவொரு சரக்குப் பெட்டக நிலையங்களுக்கும் செல்லாமல் 24 மணி நேரமும் துறைமுகத்துக்குள் நேரடியாக செல்ல முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT