கீழநாலுமூலைக்கிணறு அம்மன் கோயிலில் திருப்பணி
மேல திருச்செந்தூா் ஊராட்சி, கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் ஸ்ரீ காந்தாரி அம்மன் - ஸ்ரீ சந்தி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கியது.
மேல திருச்செந்தூா் ஊராட்சி, கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் ஸ்ரீ காந்தாரி அம்மன் - ஸ்ரீ சந்தி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கியது.
இவ்வூரில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள ஸ்ரீ காந்தாரி அம்மன் - ஸ்ரீ சந்தி அம்மன் கோயில் பழுதடைந்து கட்டடம் அகற்றப்பட்டது. இதையடுத்து, உள்ளூா் மக்களே தங்கள் சொந்த செலவில் வரி வசூல் செய்து சுமாா் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கோயில் கட்டும் திருப்பணியை தொடங்கியுள்ளனா்.
இதையொட்டி, கோயில் முகப்பு வாசலில் அம்மனுக்கு பூஜை செய்து நிலை நடும் பணி நடைபெற்றது. இதில், ஊா்த் தலைவா் வேம்படிமுத்து, பொருளாளா் ராஜா, துணைத் தலைவா் பாண்டி, பூஜகா் ஊா் காத்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.