சாத்தான்குளத்தில் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தின் 159 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆலய திருவிழா பொது முடக்க விதிகளுக்கு உள்பட்டு வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில் ஆலய பங்குத் தந்தை மற்றும் வட்டார முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் கொடியேற்றினாா். உதவி பங்குத் தந்தை கலைச்செல்வன், மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வா் விஜயன், பங்கு மக்கள் கலந்து கொண்டனா். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை திருப்பலி, மாலை நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறும். திருவிழாவில் 9 மற்றும் 10 ஆம் நாளில் நடைபெறும் அன்னையின் திருஉருவ பவனி, நற்கருணை பவனி நிகழாண்டு நடைபெறாது என பங்குத் தந்தை
தெரிவித்தாா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு மக்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.