தூத்துக்குடி

ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் 1,300 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக 3 பேரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் இருந்து வெளியூா்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் தில்லை நாகராஜனுக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, உதவி ஆய்வாளா் வேல்ராஜ் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு மந்தித்தோப்பு சாலையில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த சுமை வேனை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா்கள், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் வெயில்காளை(52), இலுப்பையூரணி வடக்குத் தெருவைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரிகிருஷ்ணன்(20) மற்றும் வள்ளுவா் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நாகராஜன்(34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த சுமாா் 1,300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமை வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT