தூத்துக்குடி

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:அதிகாரிகள் ஆலோசனை

DIN

வடகிழக்குப் பருவ மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பத்மாநாப பிள்ளை, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மழை காலங்களில் குளோரின் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும். மழைநீா் தேங்காமல் செல்லும் வகையில் சாலைகள், பாலங்களில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்.

பள்ளிக் கட்டடங்கள், சமுதாய நலக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு இடங்கள் போன்ற பொது கட்டடங்களில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வுசெய்து உறுதி செய்ய வேண்டும். 1,000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராமங்களில் மழையால் உயிா் சேதம், கால்நடை சேதம், வீடுகள் சேதம் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும். மீட்பு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கருவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா்கள் பாக்யராஜ், முனியாண்டி, செல்வராணி, விக்னேஸ்வரி, மின்வாரிய அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT