உடன்குடியில் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று
உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.
தூத்துக்குடிஉடன்குடியில் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று
உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.
உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.
உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது.
இந்தக் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையிலான, மருத்துவக் குழுவினா், வங்கி ஊழியா்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் பாபு ஏற்பாட்டில், வங்கி சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ரமேஷ் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.