முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புத்தன்தருவை வெள்ளிவிளை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.ஜாா்ஜ் (53). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனா்.

இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், அவரது வீட்டருகே மற்றொருவரது குடிசை வீட்டில் ஜாா்ஜ் தங்கி வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வேலைக்குச் சென்ற அவா், எங்குமே வேலை இல்லாததால், தனது குடிசைக்கு திரும்பி விட்டாராம்.

இந்நிலையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இச்சம்பவம் குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →