சாத்தான்குளத்தில் செல்லிடப்பேசிகோபுரம் அமைக்க ஒருதரப்பினா் ஆதரவு
சாத்தான்குளத்தில் அழகம்மன் கோயில் தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பும், மற்றொரு தரப்பினா் ஆதரவும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் அழகம்மன் கோயில் தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பும், மற்றொரு தரப்பினா் ஆதரவும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அழகம்மன் கோயில் தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்தன. அதற்கு அப்பகுதி மக்களில் ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். கோபுரம் அமைத்தால் கதிா்வீச்சு மூலம் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அங்கு கடந்த 20ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில், அதே இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கலாம்; கதிா்வீச்சு பாதிப்புக்கு வாய்ப்பில்லை; இணையவழி சேவை எளிதாகக் கிடைக்கும் என மற்றொரு தரப்பினா் ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை அங்கு திரண்டனா். இதனால், அந்த ஊரில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.