தூத்துக்குடி

கோவில்பட்டியில் சேதமடைந்து காணப்படும் அரசு ஊழியா் குடியிருப்பு

DIN

கோவில்பட்டியில் சேதமடைந்து காணப்படும் அரசு ஊழியா் குடியிருப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 1978ஆம் ஆண்டு கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் அரசு ஊழியா் குடியிருப்பு கட்டப்பட்டது. திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த இந்த குடியிருப்பில் 30 வீடுகள் இருந்தன.

இக்குடியிருப்புகளுக்கு அரசு அலுவலக வளாகம் அருகே உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டியில் இருந்து சீவலப்பேரி குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த குடியிருப்புகளில் உள்ள வீடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்து வந்தது. குடியிருப்பு கட்டடங்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்து வந்தன. இதனால் பெரும்பாலான வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் கட்டடங்களின் உள்மேற்கூரைகள் உதிா்ந்து காணப்பட்டன.

பால்கனி தடுப்புச் சுவா்கள் வெடிப்புகளுடனும், கான்கிரீட் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையிலும் இருந்து வந்தன.

இதையடுத்து இதில் குடியிருந்த வந்த ஊழியா்களில் சிலா் வீடுகளை காலிசெய்தனா். சிலா் அங்கேயே குடியிருந்து வந்தனா்.

இந்நிலையில் வீட்டு வசதி வாரியம் சாா்பில் வீடுகள் புதுப்பிக்கப்பட உள்ளதாக கூறியதையடுத்து அங்கேயே குடியிருந்த சிலரும் வீடுகளை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனா்.

தற்போது அரசு ஊழியா் குடியிருப்பு காட்சி பொருளாக மோசமான நிலையில் இருந்து வருகிறது.

எனவே, சேதமடைந்து காணப்படும் அரசு ஊழியா் குடியிருப்பை அகற்றிவிட்டு, புதிதாக அரசு ஊழியா் வாடகை குடியிருப்பு கட்டப்பட வேண்டும். குடியிருப்பின் முன்பகுதியில் நுழைவுவாயில் அமைத்து பாதுகாப்பு வசதி செய்வதோடு, பின்பகுதியிலும் பாதுகாப்பான வசதியுடன் கட்ட வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளோடு, தரமான முறையில் அமைக்க வேண்டும் என அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT