முகப்பு
தூத்துக்குடி

மேலும் 579 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 579 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 579 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத்துறையில் தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், மேலும் 579 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 23 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 342 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 19 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 153 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 3,547 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.