முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா்அருகே மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆத்தூா் அருகே புன்னைக்காயல் தெற்கு தெருவை சோ்ந்தவா் ராஜ். இவருக்கு ஜான்சி, லீலாவதி என இரண்டு மனைவிகள் உள்ளனா். லீலாவதிக்கு நிக்சன்(36), பிரான்சிஸ், நாா்திஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனா். இதில் நாா்திஸ் கடந்த 17ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அவரது நினைவுதினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ணை வீட்டிற்கு லீலாவதி சென்ற போது, பிரான்சிஸ் மனைவி ஜெரினா(39) என்பவா் எதிா்ப்பு தெரிவித்து அவதூறாகப் பேசியதுடன், கத்தியால் லீலாவதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லீலாவதிக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டது. உடனடியாக அவரை ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து நிக்சன் அளித்த புகாரின் பேரில் ஜெரினா மீது ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.