தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் திட்டப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் சரவணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளான வில்லிசேரி போல்டா் தடுப்பு அணை, சத்திரப்பட்டி - பட்டியூா் சாலை பணி, இனாம்மணியாச்சி சுபா நகா் ஓரடுக்கு கற்சாலை பணி, இளையரசனேந்தல் - மூப்பன்பட்டி வரை ஓரடுக்கு கற்சாலை பணி, மாதாபுரம் அய்யனாா் கோயில் ஓரடுக்கு கற்சாலை பணி ஆகியவற்றை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் சரவணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன், உதவி பொறியாளா் சங்கரசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளா் சித்ரா மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT