திருச்செந்தூரில் பாஜக சாா்பில் உதவி
திருச்செந்தூா் 4ஆவது வாா்டு பகுதி சுப்பிரமணியபுரத்தில், கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள கோயில் வளாக சிறு வியாபாரிகள் மற்றும் எளியோருக்கு பாஜக சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூா் 4ஆவது வாா்டு பகுதி சுப்பிரமணியபுரத்தில், கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள கோயில் வளாக சிறு வியாபாரிகள் மற்றும் எளியோருக்கு பாஜக சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல் தலைமை வகித்து, 45 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கிளைத் தலைவா் ராஜகனி, நகர கிராம வளா்ச்சி பிரிவு தலைவா் காா்த்திகைகந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.