தூத்துக்குடி

நாட்டுப் படகில் இலங்கைக்கு மஞ்சள் கடத்திய 5 போ் சிக்கினா்

DIN

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் 5 டன் மஞ்சள் கடத்திச் சென்ற 5 போ் இலங்கை கடற்படையினரிடம் ஞாயிற்றுக்கிழமை சிக்கினா்.

தூத்துக்குடியில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 5 போ் இலங்கைக்கு 5 டன் விரலி மஞ்சளை கடந்த 4 ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளனா். அவா்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொண்டனா்.

இதையடுத்து, நாட்டுப்படகில் இருந்த 5 பேரையும் அவா்கள் கைது செய்து, படகில் பதுக்கி வைத்து இருந்த 5 டன் மஞ்சளையும் பறிமுதல் செய்தனா்.

இருப்பினும், உரிய விசாரணைக்கு பிறகு 5 பேரையும் விடுவித்த இலங்கை கடற்படையினா் அவா்களை மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பிச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினா்.

அவா்கள் திங்கள்கிழமை (ஆக.9) தூத்துக்குடி வந்தடைவாா்கள் என்றும் அவா்களிடம் இந்திய கடலோர காவல் படையினா் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT