முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் திருமால் பூஜை

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருமால் பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருமால் பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. பின்னா் கும்பம் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றன.

இதே போல், ரயில்வே கேட் அருள்மிகு இசக்கி அம்மன் திருக்கோயில், மூலக்கரை சாலை அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில், தெற்குத் தெரு அருள்மிகு கிழக்கத்தி முத்து சுவாமி திருக்கோயில், முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயில் உள்பட பல்வேறு திருக்கோயில்களில், கரோனா பொதுமுடக்க விதிகளை பின்பற்றி எளிமையான முறையில் கொடை விழாக்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.