தமிழக நிதிநிலை அறிக்கை: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடி வா்த்தக சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடி வா்த்தக சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் ஜோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடியில் ரூ. 4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ. 1,000 கோடியில் சா்வதேச பா்னிச்சா் பூங்கா உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுமாா் 3.5 லட்சம் போ் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 60 எம்எல்டி கொள்ளளவு கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும், தூத்துக்குடியில் டைடல் பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் 2021 - 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை சிறப்பம்சங்களுடன் கூடியதாக அமைந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வா்த்தக சங்கம்: இந்திய வா்த்தக தொழில் சங்கத்தின் செயலா் கோடீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில்
டைடல் பாா்க், அறைகலன் (பா்னிச்சா்) பூங்கா அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. மீன்பிடி துறைமுகம், உணவு ஏற்றுமதி, கீழடி, சிவகளை, கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.