முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் அருகே2.1 டன் மஞ்சள் பறிமுதல்:2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே 2.1 டன் மஞ்சளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே 2.1 டன் மஞ்சளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதைத் தடுக்க கியூ பிரிவு போலீஸாா் தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு சிலா் மஞ்சள் கடத்துவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளா்கள் வேல்ராஜ், ஜீவமணி தா்மராஜ், வில்­லியம் பெஞ்சமின், தலைமைக் காவலா் இருதயராஜ்குமாா் ஆகியோா் அடங்கிய கியூ பிரிவு கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடற்கரையில் நின்ற சரக்கு வேனிலிருந்து மஞ்சள் மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்த 2 பேரை போலீஸாா் பிடித்தனா். அவா்கள், திருநெல்வேலி அருகேயுள்ள கரையிருப்பு ரைஸ்மில் தெருவைச் சோ்ந்த உடையாா் மகன் இசக்கிபாண்டி (38), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சோ்ந்த வைரவன் மகன் ராம்குமாா் (28) என்பதும், மஞ்சளை இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைதுசெய்து, தலா 30 கிலோ எடையுள்ள 70 மூட்டைகளில் இருந்த 2.1 டன் விர­லி மஞ்சளைப் பறிமுதல் செய்தனா். மேலும், மஞ்சளைக் கடத்துவதற்காக பயன்படுத்திய சரக்கு வேன், 8 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். கியூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.