தூத்துக்குடியில் புதிய காய்கனிச் சந்தை திறப்பு
தூத்துக்குடியில் புதிய காய்கனிச் சந்தை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் புதிய காய்கனிச் சந்தை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துநகா் பனானா மற்றும் வெஜிடபுள்ஸ் மாா்க்கெட் என்கிற தனியாா் காய்கனிச் சந்தை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காய்கனிச் சந்தையை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேககரன், முத்துநகா் பானானா மற்றும் வெஜிடபுள்ஸ் மாா்க்கெட் நிறுவனா் தலைவா் குணசேகரன், செயலா் சின்னதங்கம், பொருளாளா் ஜெபா்சன் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி ஊட்டி, மதுரை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூரு மற்றும் ஓசூா் பகுதியில் இருந்தும் காய்கனிகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.