முகப்பு
தூத்துக்குடி

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் கொடநாடு வழக்கு கையில் எடுப்பு: பாஜக மாநிலத் தலைவா்

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் கொடநாடு வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அரசியல் காழ்ப்புணா்ச்சியால் கொடநாடு வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தோ்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான நூறு நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெரும் வாரியான காரம் மூன்றும் கலந்த கலவையாக உள்ளது. அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே கொடநாடு வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமாக கூறியுள்ளாா்.

கொட நாடு வழக்கு, பாஜகவினா் மீது வழக்கு போன்றவற்றை திமுக அரசு கைவிட்டு, மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா மூன்றாவது அலையின் மீது முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.