முகப்பு
தூத்துக்குடி

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூா் மீனாட்சி நகரைச் சோ்ந்த ராமா் மகள் ராஜேஷ்வரி(21). பி.காம். பட்டதாரி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியதால், வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கச் சென்றாராம். அப்போது, அவா் மீது மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாராம். உடனே, பெற்றோா் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.