முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் அதிமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் அதிமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமை வகித்தாா். மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.இராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ., அதிமுக கொடியேற்றினாா். இதில் ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலா் ஆப்ரகாம் அய்யாத்துரை, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.