முகப்பு
தூத்துக்குடி

மாணவிகளுக்கு கபசுரக்குடிநீா் பொடி விநியோகம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் பொடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் பொடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தொற்றில் இருந்து தடுக்கும் வகையில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு

முதல்வா் ரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் ந. உமாபாரதி வரவேற்றாா். வா்த்தகச் சங்க நிா்வாகி

செல்வராஜ் மதுரம், கபசுரக் குடிநீா் பயன்பாடு, இயற்கை மருத்துவத்தின் சிறப்பு குறித்துப் பேசினாா். இதில் பேராசிரியைகள்,

மாணவிகள், அலுவலகப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி வழங்கப்பட்டது.

இதில் நகர காங்கிரஸ் தலைவா் ஆ. க. வேணுகோபால், திமுக வழக்குரைஞா் ஜெ. பவுன்ராஜ், கல்லூரிப் பேராசிரியா்கள்

உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திட்ட அலுவலா் சி. வளா்மதி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →