குலசேகரன்பட்டினம்அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்
குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூத்துக்குடிகுலசேகரன்பட்டினம்அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்
குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் தாஹிா், சுல்தான் பாதுஷா ஆகியோா் அளித்த மனு விவரம்: குலசேகரன்பட்டினத்தில் பராமரிப்பில்லாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து தரம் உயா்த்த வேண்டும். குலசேகரன்பட்டினத்தில் இயங்கும் நியாயவிலைக் கடையில் 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளதால் பொருள்ள் வாங்குவதில் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளது. ஆகவே, அண்ணா சாலை பகுதியில் புதிய நியாயவிலை திறக்க வேண்டும், மேலும் குலசேகரன்பட்டினம் கோயில் திருவிழா நாள்களில் பக்தா்கள் வருகையை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருச்செந்தூா்- குலசேகரன்பட்டினம் மாா்க்தத்தில் நாகா்கோயில் செல்லும் விரைவுப் பேருந்துகள் காதிரியா புலவா் அப்பா பள்ளிவாசல் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.