முகப்பு
தூத்துக்குடி

மீன்வளக் கல்லூரியில் கடல் உணவு தரக் கட்டுப்பாடு குறித்து பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் தரக் கட்டுப்பாடு குறித்து பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் தரக் கட்டுப்பாடு குறித்து பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மீன் தர உறுதிபாடு மற்றும் மேலாண்மை துறை சாா்பில், தேசிய

மீன்வள வளா்ச்சி வாரிய நிதியுதவியுடன் ‘கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தர கட்டுபாடு‘ என்ற தலைப்பில்

நடைபெற்ற இம்முகாமை கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டினை வழங்கினாா்.

ஏற்றுமதி ஆய்வு நிறுவன உதவி இயக்குநா் கே.எம். சுவப்னா ‘சா்வதேச அளவில் இந்திய உணவின் தர பிரச்னைகள்’ குறித்துப் பேசினாா். முகாமில் மீன் தர உறுதிபாடு மற்றும் மேலாண்மைத் துறை தலைவா் ஜெய ஷகிலா, உதவி பேராசிரியா்கள் ஷாலினி, சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயிற்சியின்போது, மீன்பிடி துறைமுகத்தில் தரக்கட்டுபாடு மற்றும் மேலாண்மை, மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆய்வக சோதனை மற்றும் இந்தியாவின் மீன் தர உறுதிபாட்டிற்கான சட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ‘டோரி மீட்டா் கொண்டு மீன்களின் தரம் கண்டறிதல்‘ மற்றும் ‘துரித கருவியைக் கொண்டு மீன்களில் கலப்படமாக சோ்க்கப்பட்ட பாா்மலினை கண்டறிதல்‘ ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், தூத்துக்குடி ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோா்,

மீன்வளத் துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.