விளாத்திகுளத்தில் கலை, அறிவியல் கல்லூரி: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
தூத்துக்குடிவிளாத்திகுளத்தில் கலை, அறிவியல் கல்லூரி: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதையடுத்து விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் முன்புள்ள மண்டபத்தில் கல்லூரி செயல்பட தொடங்கியது.
இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ-க்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம். சி. சண்முகையா, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி பணிகளை தொடங்கிவைத்தனா்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 3,457 தொழிலாளா்களுக்கு ரூ.57 லட்சத்து 81 ஆயிரத்து 700 தொகைக்கான திருமணம், கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) குமரதுரை, அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையா் ரேணுகாதேவி, தூத்துக்குடி மண்டல உதவி ஆணையா் ரோஜாலி சுமதா, கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் விமலா, பேரூராட்சி செயல் அலுவலா் மகேஷ்வரன், கல்லூரி முதல்வா் ஜெயாலி லசீதா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.ராதாகிருஷ்ணன், நகரச் செயலா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.