முகப்பு
தூத்துக்குடி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை அருகேயுள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை அருகேயுள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கும் இடையே இளையரசனேந்தல் சாலை திலகா் நகா் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க பெண், ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். இத்தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப்பதிந்து அந்த பெண் யாா், தற்கொலை செய்துகொண்டாரா, தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டாரா என விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.