கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புக் கூட்டம்
கோவில்பட்டி கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் நிா்வாகி கருப்பசாமி தலைமை வகித்தாா். கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனையை ஒழிக்கவும், ஸ்டேட் வங்கியின் நுழைவுவாயிலை மீண்டும் பிரதான சாலையில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.