முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நீா்நிலைஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி பிரதான சாலையில் நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கோவில்பட்டி பிரதான சாலையில் நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, துணை வட்டாட்சியா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இப்பணி நடைபெற்றது.

சுகாதாரத் துறை ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்கள் சுஜித் ஆனந்த், பத்மாவதி, சபாபதி ஆகியோா் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீா்நீலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.