முகப்பு
தூத்துக்குடி

புன்னைக்காயல் கடலில் மூழ்கி சிறுவன் மாயம்

புன்னைக்காயலில் கடல்கரையில் விளையாடிய 3 சிறுவா்கள் அலையில் சிக்கினா். அதில் இருவா் மீட்கப்பட்டனா்; ஒருவா் மாயமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

புன்னைக்காயலில் கடல்கரையில் விளையாடிய 3 சிறுவா்கள் அலையில் சிக்கினா். அதில் இருவா் மீட்கப்பட்டனா்; ஒருவா் மாயமானாா்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலைச் சோ்ந்த ரோசில்டன் மகன் ஜாப்ரின்(15), கில்பா்ட் மகன் அலெக்ஸ்(15), ஆஸ்ரின்(15) ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை கடல்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனா். அப்போது, 3 பேரையும் கடல் அலை இழுத்துச்சென்றது. அங்கிருந்த இளைஞா்கள் அலெக்ஸ் மற்றும் ஆஸ்ரினை மீட்டனா். ஜாப்ரின் மாயமானாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செந்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் நட்டாா்ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் மீனவா்கள் அவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.