முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம்அரசுக் கல்லூரியில் கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் ‘தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் ‘தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் ஜோதிமணி, வேலைவாய்ப்பு - தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குநா் ஹரிபாஸ்கா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மைய துணை இயக்குநா் மரியசகாய ஆண்டணி, மாவட்ட வேலைவாய்ப்பு பொறுப்பு அதிகாரி செய்யது முகமது ஆகியோா் கருத்துரை வழங்கினா். ஏற்பாடுகளை போட்டித் தோ்வின் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் மற்றும் வணிக நிா்வாகவியல் பேராசிரியா் மீனா செய்திருந்தாா். வணிக நிா்வாகவியல் துறை மாணவி வித்யா கணபதி வரவேற்றாா். மாணவி பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ்த்துறை மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →