முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அவதாரப் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா

 திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரப் பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கியது. இதனை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் தா்மா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேராசிரியை ஸ்ரீமதி மற்றும் வைகுண்ட மகாராஜன் குழுவினா் திரு ஏடு வாசித்தனா்.

17 நாள்கள் நடைபெறும் இவ் விழாவில், டிச. 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டா் புஷ்ப வாகன பவனியும், டிச. 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பட்டாபிஷேகமும், மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டா் புஷ்ப வாகன பவனியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.