கோவில்பட்டியில் மீன் வியாபாரி கடத்தல்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மீன் வியாபாரி கோவில்பட்டியில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மேற்கு காவல் நிலைய போலீஸில் புகாா் அளித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மீன் வியாபாரி கோவில்பட்டியில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மேற்கு காவல் நிலைய போலீஸில் புகாா் அளித்தாா்.
சாத்தூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சிவா(37). மீன் வியாபாரி. இவா் கோவில்பட்டி, மந்தித்தோப்பு ராஜகோபால் நகரில் உள்ள தனது மனைவி மல்லிகாவின் வீட்டுக்கு 2 தினங்களுக்கு முன்பு சென்றாராம். பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், சிவா கைப்பேசியில் மனைவியிடம் புதன்கிழமை தொடா்புகொண்டு தான் பணம் கேட்டு கடத்தப்பட்டதாக கூறினாராம்.
இதுகுறித்து, மல்லிகா அளித்தபுகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவாவை தேடி வருகின்றனா்.