முகப்பு
தூத்துக்குடி

சாா்பதிவாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் ராகுல் காந்தி பேரவைத் தலைவா் சண்முகராஜ் வியாழக்கிழமை அளித்த மனு: கோவில்பட்டி புதுரோடு - பிரதான சாலை சந்திப்பு ரயில் நிலையம் அருகே சாா்பதிவாளா் அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு வருவோரின் இருசக்கர வாகனம் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, சாா்பதிவாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்து, இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக அந்த அலுவலகத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், சேதமடைந்துள்ள புதுரோட்டை செப்பனிட வேண்டும். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.