மேலாத்தூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்
மேலாத்தூரில் தமிழக அரசின் சாா்பில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலாத்தூரில் தமிழக அரசின் சாா்பில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பக்கீா்முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அதிகாரி பாா்த்திபன், மருத்துவ அதிகாரி கணேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வடிவேல், வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் ஆனந்தகிருஷ்ணன், வட்டார சமுதாய செவிலியா்கள், பகுதி செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருந்தாளுநா்கள் சிகிச்சையளித்தனா்.
முகாமில் பங்கேற்றோருக்கு குடல்நோய், மனநோய், இதயநோய், மகளிா், குழந்தைகள் நலம் உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சையளிக்கப்பட்டதோடு, ரத்தத்தில் இரும்புச்சத்து, சா்க்கரை, கொழுப்பு அளவு, சிறுநீரில் உப்பு, சா்க்கரை அளவு ஆகியவை கண்டறியப்பட்டு, ரத்த அழுத்தப் பரிசோதனை, இசிஜி பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன. கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினா்கள் ராஜலெட்சுமி, முருகேஸ்வால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆத்தூா் சுகாதார ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.