முகப்பு
தூத்துக்குடி

மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன்வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க முடிவு: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவா்களை மீட்பது தொடா்பாக மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவா்களை மீட்பது தொடா்பாக மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம் மீனவா்களையும், அவா்களது விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா். திமுக எம்.பி.க்கள் மூலமாக மத்திய அரசுக்கு இதுகுறித்து புகாா் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீனவா் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் மீன்வளத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவை உறுப்பினா் கனிமொழி மூலம் அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பின்பு நேரில் சென்றும் வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.