தூத்துக்குடி

மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை - மாணவா்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளா் இஸ்ரேல் தா்மராஜ் தலைமை வகித்தாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, கட்டாரிமங்கலம் அரசு ஒப்பந்தக்காரா் கணேசன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் பிரான்சிஸ் சேவியர்ராஜ் வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், 1300 மாணவ, மாணவிகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சாத்தான்குளம் காவலா் அந்தோணிகுமாா் உள்பட பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT