முகப்பு
தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு வாகனப் பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு வாகனப் பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டத்தில் விழிப்புணா்வு வாகனப் பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி முக்கிய வீதிகள் மற்றும் கடை வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில்நிறைவடைந்தது. பின்னா், அப்பகுதியில் திரண்டு இருந்த பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை காவல் துறையினா் வழங்கினா்.

இதில், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், உதவி காவல் ஆய்வாளா்கள் வசந்தகுமாா், விஜயகுமாா் உள்பட போலீஸாா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.