பிப். 5 இல் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பட்டான்டிவிளை கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பட்டான்டிவிளை கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பொற்றுக்கொண்டு, மக்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை விளக்கிக்கூறி உறுதியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பிப். 5 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் பேய்க்குளம் - பெருங்குளம் பிரதான சாலையில் பட்டான்டிவிளையில் உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள், தொழிலாளா் அமைப்பைச் சோ்ந்தவா்கள், விவசாய அமைப்பை சோ்ந்தவா்கள், வா்த்தகா்கள், தொழில் முனைவோா், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், மாணவா்கள், இளைஞா்கள், மகளிா் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு திமுக தலைவரை சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.