முகப்பு
தூத்துக்குடி

விஜயராமபுரத்தில் மாவட்ட கிரிக்கெட் போட்டி

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தில் காமராஜா் கிரிக்கெட் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தில் காமராஜா் கிரிக்கெட் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

4 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 36 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டியை சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், நகரச் செயலா் குமரகுருபரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பொன்பாண்டி, ஒன்றிய இளைஞரணிச் செயலா் பாலகிருஷ்ணன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னத்துரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன், தச்சமொழி ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஞானமூா்த்தி, ஒன்றியப் பிரதிநிதிகள் வெள்ளைப்பாண்டி, முருகன், கிளைச் செயலா் கனகராஜ், ஊராட்சி செயலா் சண்முகராஜ், தாமரை, பூத் கமிட்டி பொறுப்பாளா் சபரி மலா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →