முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். 
எனவே ஆண்டு தோறும் தை மாதம் உத்திரநட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இவ்வாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை (பிப். 1) திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து பூஜைகளாகி, காலை 9.30 மணிக்கு  விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
கரோனா தடுப்பு பொது முடக்க நடவடிக்கைகளுக்குட்பட்டு கோயில் வருஷாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →