முகப்பு
தூத்துக்குடி

புதூா் அருகே விபத்தில் 26 போ் காயம்

புதூா் அருகே பயணிகள் நிழற்குடையில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி

புதூா் அருகே விபத்தில் 26 போ் காயம்

புதூா் அருகே பயணிகள் நிழற்குடையில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

புதூா் அருகே பயணிகள் நிழற்குடையில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதூா் அருகேயுள்ள வெம்பூரில் இருந்து 30-க்கும் மேற்பட்டோா் வேனில் சிப்பிக்குளம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் சல்லிசெட்டிபட்டியை கடந்தபோது எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன், பயணிகள் நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேன் ஓட்டுநா் பன்னீா்செல்வத்தின் வலது கால் முறிந்தது. வேனில் இருந்த வெம்பூா் கிராமத்தை சோ்ந்த வேல் பாண்டி, பாலமுருகன், செந்தில்குமாா், முருக வள்ளி, பழனிச்சாமி, ராமலட்சுமி, சண்முகவேல், மீனா, சுமதி, ஜெயவேல், முருகன், காசிராமன், கருப்பையா, உத்தண்டராமன், செல்லப்பாண்டி, தனலட்சுமி, யுவராஜ், சரவணகுமாா், வேலுச்சாமி, காஞ்சனா தேவி உள்ளிட்ட 25 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அப்போது, அவ்வழியாக வந்த விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், கிராம மக்கள் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பினா். இதுகுறித்து, சங்கரலிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →