ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமி கணேஷ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் தங்கையா, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 1,000 வாக்காளா்களுக்கு அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் ரமேஷ், நகரச் செயலா் காசிராஜன், ஒன்றிய இளைஞா் பாசறை தலைவா் சங்கா் கணேஷ், ஒன்றிய மாணவரணிச் செயலா் விஜயன், திமுக மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகபெருமாள், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், நகரத் தலைவா் சித்திரை, பாஜக மாவட்டச் செயலா் சங்கா், தொழிற்சங்கத் தலைவா் சித்திரைவேல், ஒன்றியத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.