தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றியத்தில் ரூ.58.29 லட்சத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

DIN

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.58.29 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய கட்டடப் பணிகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கம்மாப்பட்டி மற்றும் திருமங்கலக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செவிலியா் குடியிருப்பு, ஆவுடையம்மாள்புரத்தில் ரூ.14.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம், ரூ.9.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அவா் வெள்ளாளங்கோட்டையில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா். பின்னா், ராமநாதபுரம் மற்றும் பட்டியூா் கிராமத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை திறந்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசீம், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் பரமசிவன், கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT