தூத்துக்குடி

புன்னைக்காயலில் சிறு மருத்துவமனை திறப்பு

DIN

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலி­ல் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசியது:

திருச்செந்தூா், ஆலந்தலை, பெரியதாழை, அடைக்கலாபுரம், புன்னைக்காயல் பகுதிகளில் தற்போது ரூ.120 கோடிக்கு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தாமிரவருணிஆறு கட­லில் சங்கமிக்கும் இடமான புன்னைக்காயலி­ல், மழை வெள்ளத்தின் போது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது என்றாா் அவா்.

தொடா்ந்து கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

விழாவில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட திட்ட அலுவலா் தனபதி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா் முருகேசன், ஆழ்வாா்திருநகரி வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றியச் செயலா் விஜயகுமாா், புன்னைக்காயல் ஊா் தலைவா் இட்டோ, அதிமுக கிளைச் செயலா் அலாய்ன்ஸ், ஆத்தூா் செயலா் சோமசுந்தரம், நாசரேத் செயலா் கிங்ஸ்­லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆழிபுத்திரன் வரவேற்றாா்.மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT