புதுக்கிணறு, போலையா்புரத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு
சாத்தான்குளம் ஒன்றியம், பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட புதுக்கிணறு, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட போலையா்புரத்தில் தலா ரூ. 9.08 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியம், பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட புதுக்கிணறு, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட போலையா்புரத்தில் தலா ரூ. 9.08 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி ஆகியோா் தலைமை வகித்தனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியன், பாண்டியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் இந்திரா வரவேற்றாா்.
எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா்.
இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா்கள் சவுந்திரபாண்டி, அழகேசன், மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னத்துரை, ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் அன்னகணேசன், செயலா் பாலகிருஷ்ணன், புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன், ஒன்றிய கவுன்சிலா்கள் சுமதி, செல்வம், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.